Monday, May 21, 2018

பழமொழி நானூறு - 6 ஆம் வகுப்பு


ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார் .அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுகளில்லை,அந்த நாடுகள் அயல் நாடுகளாகா அவ்வறிவுடையோர் நாடுகளேயாம்.ஆகையால் வழியில் உண்பதற்கு உணவு  கொண்டுசெல்ல வேண்டியதில்லை


நூல் குறிப்பு:


  •   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  •   நானூறு பாடல்களை கொண்டது.
  •   ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி உண்டு.
  •   ஆற்றுணா வேண்டுவது இல் என்பதற்கு கற்றவனுக்கு கட்டுச்சோறு    வேண்டாம்   என்பது பொருள்.


ஆசிரியர் குறிப்பு:

  •   இந்நூலின் ஆசிரியர் = முன்றுறை அரையனார்.
  •   முன்றுறை என்பது ஊர்பெயர்.
  •   அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
  •   முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம்  அல்லது அரையன்     என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.

No comments:

Post a Comment