தேம்பாவணி- 8 ஆம் வகுப்பு சமச்சீர்
- தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி
எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள்
உண்டு.
- இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது.
- சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.
- இந்நூல் கிறிஸ்தவச் சமயத்தாரின் கலைகளஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது .
- தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது.
- ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன.
- மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி.
No comments:
Post a Comment