Thursday, June 14, 2018

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று
இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது

இந்த நூலின் 380 பாடல்களுக்குப் பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார்.

பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்களுக்கும் நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். 

பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியுள்ளார் 

குறுந்தகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன்குட்டுவன்திண்தேர்ப் பொறையன்பசும்பூண் பாண்டியன்போன்ற பேரரசர்கள் மற்றும் பாரிஓரிநள்ளிநன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன.

'கொங்குதேர் வாழ்க்கைஎன்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடிதருமி என்ற புலவருக்கு "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலற்றுச் சான்றாகும்

"வினையே ஆடவ்ர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது

நளவெண்பா - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

பொருள் தருக :
  1.      ஆழி – கடல்
  2.      விசும்பு – வானம்
  3.      செற்றான் – வென்றான்
  4.      அரவு – பாம்பு
  5.      பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு 
  6.      வள்ளை – ஒருவகை நீர்க்கொடி
  7.      கடா – எருமை
  8.      வெளவி – கவ்வி
  9.      சங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள்
  10.      கொடி – பவளக்கொடி
  11.      கோடு – கொம்பு
  12.      கழி – உப்பங்கழி
  13.      திரை – அலை
  14.      மேதி – எருமை
  15.      கள் – தேன்
  16.      புள் – அன்னம் 
  17.      சேடி – தோழி
  18.      ஈரிருவர் – நால்வர்
  19.      கடிமாலை – மணமாலை
  20.      தார் – மாலை
  21.      காசினி – நிலம்
  22.      வெள்கி – நாணி
  23.       ஒண்தாரை – ஒளிர்மிக்க மலர்மாலை
  24.      மல்லல் – வளம்
  25.      மடநாகு – இளைய பசு
  26.      மழவிடை – இளங்காளை
  27.      மறுகு – அரசவீதி 
நூல் குறிப்பு :
  •  மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும்.
  •  சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  •  இவற்றுள் 13 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். இதில் 431  வெண்பாக்கள் உள்ளன
 ஆசிரியர் குறிப்பு :
  • நளவெண்பா  இயற்றிய புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டுப் பொன்விளைந்த களத்தூரிலே தோன்றியவர்.
  • பாண்டியனாகிய வரகுணனுக்குப் பெரிதும் அன்புடையவராக அவன் அவையில் வீற்றிருந்தார்.பாண்டியனின் மகளுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்.
  • அவள் சோழ மன்னான குலோத்துங்கனை மணக்கவும், அவள் வேண்டுகோளின்படி இவரும் சோழனின் அவைக்குச் சென்றார்.
  • அங்கே இவருக்கும் சோழனின் ஆசிரியர் ஒட்டக்கூத்தருக்கும் பகைமையும் மனமாறுபாடும் உண்டாகி நாளுக்கு நாள் பெருகி வரலாயிற்று.
  • இவர்களுக்கிடையே நடைபெற்ற பலவாக்குவாதங்களுக்குச் சான்றாக பல பாடல்கள் உள்ளன.  
  • இதன் பொருட்டு இவர் பல கொடுமைகளுக்கும் உள்ளானார். முடிவில் புலவர்களிடையே சமாதானம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. 
  • ஒட்டக்கூத்தரிடம் மாறுபாடு நிலவிய காலத்தில், இவர் சில காலம் மள்ளுவநாட்டைச் சேர்ந்தசந்திரன் சுவர்க்கி என்னும் குறுநில மன்னனின் ஆதரவில் வாழ்ந்து வந்தார்.
  • அந்த நாளில் அவன் விருப்பப்படி இவர் இயற்றியதே இந்த நளவெண்பா என்னும் நூல் ஆகும். 

அசலாம்பிகை அம்மையார் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

அசலாம்பிகை அம்மையார் 
  • அசலாம்பிகை அம்மையார் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டனை என்ற ஊரில் பிறந்தார் .
  • அசலாம்பிகை அம்மையார் சிறந்த பேச்சாளர்
  • திரு வி க இவரை இக்கால ஔவையார் என்று பாராட்டுகிறார்

இயற்றிய நூல்கள்
  • ஆத்திசூடி வெண்பா
  • இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல்(409 பாடல்கள் )
  • குழந்தை சுவாமிகள் பதிகம்
  • திருவாமாத்தூர்ப் புராணம்
  • திருவுடையூர்  தலபுராணம்
  • காந்தி புராணம்(2034 பாடல்கள் )
  • திலகர் புராணம்

வேலுநாச்சியார் - சமச்சீர் பாடம்

வேலுநாச்சியார்
  • ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
  • சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார்
  • 1772 இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுகனாதருக்கும் நடந்த போரில் முத்துவடுகநாதர்வீர மரணமடைந்தார்
  • வேலுநாச்சியார் மைசூர் மன்னர் ஐதர் அலியை சந்தித்து ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்து பேசினார்
  • ஐதர் அலி அவருக்கு படைவீரர்களை அனுப்பி உதவினார்
  • 1780ஆம் ஆண்டு மருது சகோதரர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு சிவகங்கையை கைப்பற்றினார் 

Tuesday, June 5, 2018

வில்லிபாரதம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


        வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்

           மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்

        தேன்பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும்

           திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்

        ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்

           உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்

        யான்பெற்ற பெருந்தவப்பே(று) என்னை அன்றி

           இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே.

சொற்பொருள்: 
  1.  வான்பெற்ற நதி –  கங்கையாறு 
  2.  துழாய் அலங்கல்  – துளசிமாலை
  3.  களபம் –  சந்தனம் 
  4.  புயம் – தோள்
  5.  தைவந்து   தொட்டுத்தடவி 
  6.  ஊன் – தசை 
  7.  பகழி – அம்பு 
  8.  இருநிலம் –  பெரிய உலகம் 
  9.  நாமம் – பெயர் 

  ஆசிரியர் குறிப்பு:
  •  பெயர் –  வில்லிபுத்தூரார் 
  •  தந்தை –  வீரராகவர் 
  •  ஆதரித்தவர் –  வக்கப்பாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான் 
  •  காலம் –  பதினான்காம் நூற்றாண்டு 
 நூல் குறிப்பு: 
  •  இந்நூல் பத்து  பருவங்களை கொண்டது. 
  •  நாலாயிரத்து முந்நூற்றைம்பது விருத்தப்  பாடலால்  ஆனது
  •  இப்பாடல் எட்டாம் பருவமாகிய கன்னபருவத்தில்  இடம்பெற்றுள்ளது 

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


சொற்பொருள்:
  1.  மதி – அறிவு
  2.  அமுதகிரணம் –  குளிர்ச்சியான ஒளி
  3.  உதயம் –  கதிரவன்
  4.  மதுரம் – இனிமை
  5.  நறவம் – தேன்
  6.  கழுவு துகளர் –  குற்றமற்றவர்
  7.  சலதி – கடல்
  8.  அலகு இல் - அளவில்லாத
  9.  புவனம் – உலகம்
  10.  மதலை – குழந்தை
  11.  பருதிபுரி –  கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)

 
ஆசிரியர் குறிப்பு:
  •  பெயர் –  குமரகுருபரர்
  •  பெற்றோர் –  சண்முகசிகாமணிக் கவிராயர்சிவகாமி சுந்தரியம்மை
  •  ஊர் –  திருவைகுண்டம்
  •  இயற்றிய  நூல்கள் – கந்தர்கலிவெண்பாமதுரை  மீனாட்சி அம்மை  பிள்ளைத்தமிழ்,மதுரைக்  கலம்பகம்,  சகலகலாவல்லி    மாலை,திருவாரூர் மும்மணிக்கோவை ,   நீதிநெறி விளக்கம்  முதலியன.
  •  சிறப்பு –  தமிழ்வடமொழிஇந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை  மிக்கவர். திருப்பணந்தாளிலும்,  காசியிலும் தம்பெயரால் மேடம்  நிறுவி உள்ளார்.
  •  இறப்பு –  காசியில் இறைவனது திருவடியடைந்தார் ..
  •  காலம் –  பதினேழாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
  •   96 வகை  சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
  •  இறைவனையோ  நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக்  கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெருவது    பிள்ளைத்தமிழ்.
  •  பத்து  பருவங்கள்பருவத்திற்கு பத்து பாடல் என நூறு பாடல்கள்  கொண்டது.
  •  இது ஆண்பாற்  பிள்ளைத்தமிழ்பெண்பாற் பிள்ளைத்தமிழ் என  இருவகைப்படும்.
  •  பத்து பருவங்களில்  காப்புசெங்கீரைதால்சப்பாணிமுத்தம்,   வருகை,  அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற்  பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை .இறுதி மூன்று பருவங்களான  சிற்றில்சிறுபறைசிறுதேர். ஆண்பாலுக்கும் அம்மானை,   கழங்கு(நீராடல்)ஊசல் ஆகிய மூன்றும் பெண்பாற்    பிள்ளைத்தமிழுக்கும் உரியன .
  •  புள்ளிருக்குவேளூரில்  (வைதீஸ்வரன் கோவில்) எழுந்தருளியுள்ள  முருகப்பெருமானின் பெயர்  முத்துக்குமாரசுவாமி.  அவர் மீது    பாடப்பட்டதால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என பெயர்  பெற்றது

நாடகக்கலை - 8 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்

  • நாடகம் என்னும் சொல் நாடு + அகம் = நாடகம் எனப் பிரியும்
  • நாட்டை அகத்தில் கொண்டது நாடகம்
  • நாட்டின் கடந்த  காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால்நாடகம்  எனப் பெயர் பெற்றது
  • கதையை,  நிகழ்ச்சியைஉணர்வை நடித்துக் காட்டுவதும்கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம்  என்பர்.
  • இதற்குக்  நாடகக்கலைஎன்னும் பெயர் உண்டு.


நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:
  • தமிழின்  தொன்மையான கலை வடிவம் நாடகம்.
  • நாடகம் என்பது  போலச் செய்தல் என்னும் பண்பு அடிப்படையாக அமைதலைக் காணலாம்
  • பிறர்  செய்வதைப்போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம் தோன்றக் காரணம்.
  • பண்டைய மரப்பவைக்கூத்து , பொம்மலாட்டமாக வளர்ச்சி அடைந்த பின்னர் தோல்பாவைக் கூத்து ,நிழற் பாவைக்கூத்து ஆகியன முறையே பாவைக் கூத்தின் வளர்ச்சி நிலைகளாக இருந்தன

இலக்கியங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள்
  • தொல்காப்பிய  மெய்பாட்டியல் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
  •  " கூத்தாட்  டவைக்குல்லாத் தற்றே "என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி தெரிய வருகிறது .
  • சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள்நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று நாட்டியமாடும் மாதவியை குறிப்பிடுகிறார்



இலக்கணம் வகுத்த நாடக நூல்கள்
  • தமிழ் நூல்களில் முறுவல்,  சயந்தம்செயிற்றியம்மதிவாணர் நாடகத்தமிழ் நூல்,விளக்கத்தார் கூத்துகுணநூல்,  கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாட்டியத்திற்கும் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.
  • பரிதிமாற்கலைஞர்,  செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம் அதன் விளக்கம்,  வகைகள்எழுதப்பட வேண்டிய முறைகள் நடிப்புக்குரிய இலக்கணம் நடிப்பவர்களுக்குரிய இலக்கணம்  போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.
  • சுவாமி  விபுலானந்தர் எழுதிய  மதங்க சூளாமணியும்  மறைமலையடிகள் எழுதிய  சாகுந்தலமும் நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் ஆகும்
  • பம்மல்  சம்பந்தனார்நாடகத்தமிழ்  என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து  எழுதியுள்ளார்.

காலம்தோறும் நாடகக்கலை
  • ஏழாம்  நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்ற நாடக நூலை எழுதியுள்ளான்.
  • பதினொன்றாம்  நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம்நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • நாயக்க  மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.
  • பள்ளு நாடக வகை உழவர்களின் வாழ்க்கையை கூறுகிறது
  • பதினேழாம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.
  • பதினெட்டாம்  நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம்கோபால கிருட்டின பாரதியின்  நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.
  • சமுதாய சீர்திருத்த நாடகங்களில் காசி  விஸ்வநாதரின் டம்பாச்சாரி விலாசம்  , பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை கி பி 1891 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
  • இந்நூல் லிட்டன் எழுதிய மறைவழி என்னும் ஆங்கில கதையை தழுவியது
  • கதரின் வெற்றி நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக  நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.
  •  இதனைத்  தொடர்ந்து தேசியக்கொடிதேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன
  • சங்கரதாசு  சுவாமிகள்   என்று  தமிழ் நாடக உலகின் இமயமலைதமிழ் நாடக பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார்
  • பிரகலாதன் ,சிறுத்தொண்டர்,  இலவகுசா ,பவளக்கொடி , அபிமன்யு ,சுந்தரி முதலிய நாற்பதுக்கும் மேற்ப்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்
  • தமிழ் நாடகத்தந்தை என்று போற்றப்பட்ட பம்மல் சம்பந்தனார் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை மொழிப் பெயர்த்துள்ளார் . 
  • இவரது மனோகரன் நாடகம் எழுபது ஆண்டுகளாக தமிழ் நாடக மேடைகளில் புகழ் பெற்று விளங்கியது .
  • மதுரையில் ஒளவையார் நாடகம் அரங்கேறியது .இதில் ஒளவையாராக நடித்த தி க சண்முகனார் ஒளவை சண்முகனார் என்று அழைக்கப்பட்டார்.
  • நாடகச்  சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து என்பது நாடகம் பற்றிய கவிமணியின் கருத்து 

அம்புஜத்தம்மாள் - சமச்சீர் பாடம்

அம்புஜத்தம்மாள் 
  • 1899ஆம் வசதியான குடும்பத்தில் ஆண்டு பிறந்தார்.
  • அன்னை  கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
  • பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
  • வை மு கோதைநாயகி அம்மாள் ,ருக்மணி முதலியவர்களோடு இணைந்து பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தார்
  • காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்  என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.
  • தன் தந்தையின்  பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
  • அம்புஜத்தம்மாள் எழுபதாண்டு நினைவாக,நான் கண்ட பாரதம்என்ற நூலை எழுதினார்.  1964ஆம் ஆண்டு  இவருக்கு பத்மஸ்ரீவிருது வழங்கப்பட்டது

கடலூர் அஞ்சலையம்மாள் - சமச்சீர் பாடம்

கடலூர் அஞ்சலையம்மாள்
  • 1890 – ல் கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்
  • நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்பு காய்ச்சும் போராட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதலிய போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்
  • வேலூர்  சிறையில் இருந்த போதுகருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேய அரசு வெளியில்  அனுப்பிவிட்டுமகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
  • நீலன் சிலையை  அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும்  சிறைத்தண்டனை பெற்றார்.
  • காந்தியடிகள்  சிறையில் வந்து பார்த்துஇவரின் மகள் அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று  வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
  • காந்தியடிகள் அஞ்சலையம்மாலை தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைத்தார்

Monday, June 4, 2018

யார் கவிஞன்? - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

                    யார்  கவிஞன்?    
  
                    காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

               கைம்மாறு விளைந்துபுகழ் பெறுதல் வேண்டி

        மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை

              மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

        தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி    விட்டுத்

             தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

        மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு

             மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;

        ஆட்சிக்கும் அஞ்சாமல்யாவ ரேனும்

          ஆள்கஎனத் துஞ்சாமல்தனது நாட்டின்

        மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்;

          மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது

        காட்சிக்குப் புளியாகிக் கொடுமை மாளக்

          கவிதைகளைப் பைசுபவன் கவிஞன் ஆவன்;

        தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்

          தலைவனெனப் பாடுபவன் கவிஞன்வீரன்.

சொற்பொருள்:

  1.   கைம்மாறு –  பயன்
  2.   மாசற்ற –  குற்றமற்ற
  3.   தேட்டையிட –  செல்வம் திரட்ட
  4.   மீட்சி –  மேன்மை
  5.   மாள – நீங்க





ஆசிரியர் குறிப்பு:

  பெயர்                : முடியரசன்

  இயற்பெயர்           : துரைராசு

  பெற்றோர்            : சுப்புராயலுசீதாலட்சுமி

  ஊர்                  : தேனி  மாவட்டம் பெரியகுளம்

  இயற்றிய  நூல்கள்   : பூங்கொடிகாவியப்பாவைவீரகாவியம்
                                                         முடியரசன்   கவிதைகள் முதலியன.                
                       
  பணி                : தமிழாசிரியர், மீ.சு. உயர்நிலைப்    
                        பள்ளி, காரைக்குடி.

  பட்டம்              :  பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு    
                        என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால்
                        வழங்கப்பெற்றது.

  பரிசு               :  பூங்கொடி என்னும் காவியத்திற்காக 1966-ல் 
                        தமிழக அரசு பரிசு வழங்கியது .

  சிறப்பு              :  முடியரசன்பாரதிதாசன் பரம்பரைக் 
                        தலைமுறைக்  கவிஞர்களுள் மூத்தவர். தந்தை                           பெரியார்,  பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம்                                          நெருங்கிப் பழகியவர்.