- தலைமுறை தலைமுறையாக நிகழும் பண்புகள் கடத்தலைப் பாரம்பரியம் எனலாம்
- தாய் தந்தை இருவரும் தங்களின் மரபுப் பொருளான (DNA )டி .என் . ஏ மூலம் பண்பு கடத்துதலில்சமப் பங்கினை கொள்வதன் மூலம் பங்களிக்கின்றனர்
- பாரம்பரியக் கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டவர் கிரிகர் ஜோகன் மெண்டல் (1822-1884)
- மெண்டல் தனது தோட்டத்தில் பட்டாணிச் செடியை வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டார்
- மெண்டலின் ஆய்வில் பட்டாணிச் செடியில் இரண்டாம் தலைமுறையில் பெறப்பட்ட நெட்டை : குட்டை பண்புகள் 3 : 1 என்ற விகிதத்தில் இருந்தன .
- மெண்டல் ஆஸ்திரிய நாட்டைச்சேர்ந்த அகஸ்தீனியத் துறவி
- புறத்தோற்றத்தில் வெளிப்படையாகக் காணப்படும் பண்புகளான நெட்டை அல்லது குட்டை . ஊதா அல்லது வெள்ளை நிறம் போன்றவைப் புறத்தோற்றப் பண்பு (பீனோட்டைப்)
- இப்பண்புகளுக்குக் காரணமான குரோமோசோம் அல்லது ஜீன் அமைப்பு ஜீனாக்கப்பண்பு (ஜீனோ டைப் ) எனப்பட்டது
- ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத தன்மைக்கு அல்லீல்கள் என்று பெயர் .
- அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லீலோ மார்புகள் என்று பெயர் .
- உடலுறுப்புப் பயன்பாடு பயன்பாடு குறித்து விளக்கியவர் ஜீன் பாப்டைஸ் லாமார்க்
- ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கினார்
- தேவையும் எண்ணமுமே இம்மாற்றத்திற்கு காரணம் என்று விளக்கினார்
- இயற்கைத் தேர்வு கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின்
- பரிணாமம் என்பது எளிய தன்மை கொண்ட உயிரிகளிலிருந்து மேம்பட்ட தன்மை கொண்ட உயிரினங்களில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்களாகும்
- 3 - 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் போன்ற ஹோமினிட்டுகள் கிழக்கு ஆப்ரிக்காவிற்கு வந்தனர் .
- மனித இயல்பை ஒத்திருந்த ஹோமினிட்டுகள் ஹோமோ ஹெபிலிஸ் (மனிதருக்கு ஒப்பான இயல்பினர் ) என்று அழைக்கப்பட்டனர்
- 3 - 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் - ஹோமினிட்டுகள்
- 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் - ஹோமோஎரக்ட்டஸ்
- 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் - நியாண்டர்தால் மனிதர்கள்
- 75000 - 10000 ஆண்டுகளுக்கு முன்னர் - தற்கால ஹோமோசெபியன்கள்
- 10000 ஆண்டுகளுக்கு முன்னர் - மனிதப் பரிணாமம்
- மரபுப்பொறியியல் என்பது உயிரியின் குரோமோசோமின் டி என் ஏ வில் புதிதாக மரபியல் தன்மைகளைச் சேர்த்தோ குறைத்தோ மாற்றம் செய்வது ஆகும்
- வினிகர் உற்பத்தி செய்ய அசிடிக் அமிலம் பயன்படுகிறது
- ஸ்டீராய்டுகள் லிப்பிடுகளில் இருந்து பெறப்பட்டவையாகும்
- ரைசோபஸ் பூஞ்சைகளில் இருந்து கொலஸ்ட்ரால் அடங்கிய பிரட்னிசெலோன் என்னும் ஸ்டீராய்டு பெறப்படுகிறது .
- எட்வர்ட் ஜென்னர் 1791 - ல் தடுப்பூசிக் கொள்கையை வெளியிட்டார்
- டாலி என்பது பிரதியாக்க முறையில் டாக்டர் வில்மட் அவர்களால் ஜூலை 1996 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செம்மறியாடு ஆகும்
- மூலச்செல் (ஸ்டெம்செல்) என்பது சிறப்படையாத செல் குழுமம் ஆகும் . இவை மைட்டாசிஸ் முறையில் பிளவுற்று மிக அதிக செல்களை உருவாக்கும் தன்மையுடையன .
- உயிரித் தொழில் நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் B12 பெர்னீஷியஸ் ரத்தசோகை நோயைக் குணமாக்கப் பயன்படுகிறது .
- உயிர் உணரி என்பது உயிரியல் தூண்டலை மின் தூண்டலாக மாற்றும் கருவி ஆகும் .
- உடல் செல் மரபணு மருத்துவம் - குறைபாடு உள்ளவரின் முழு ஜீன் தொகுதியையும் மாற்றும் முறையாகும் . இம் மாற்றம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை .
- இனச்செல் மரபணு மருத்துவம் - பெற்றோர்களின் அண்டம் அல்லது விந்துச் செல்கள் மாற்றத்தினால் செய்யப்படுவதாகும் .இம்மாற்றம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது .
TNPSC Online
Thursday, February 14, 2019
மரபும் பரிணாமும் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் அறிவியல்
Thursday, June 14, 2018
குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று
இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது
இந்த நூலின் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார்.
பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்களுக்கும் ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார்.
பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்
குறுந்தகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன.
'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்கு "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலற்றுச் சான்றாகும்
நளவெண்பா - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
பொருள் தருக :
- ஆழி – கடல்
- விசும்பு – வானம்
- செற்றான் – வென்றான்
- அரவு – பாம்பு
- பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு
- வள்ளை – ஒருவகை நீர்க்கொடி
- கடா – எருமை
- வெளவி – கவ்வி
- சங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள்
- கொடி – பவளக்கொடி
- கோடு – கொம்பு
- கழி – உப்பங்கழி
- திரை – அலை
- மேதி – எருமை
- கள் – தேன்
- புள் – அன்னம்
- சேடி – தோழி
- ஈரிருவர் – நால்வர்
- கடிமாலை – மணமாலை
- தார் – மாலை
- காசினி – நிலம்
- வெள்கி – நாணி
- ஒண்தாரை – ஒளிர்மிக்க மலர்மாலை
- மல்லல் – வளம்
- மடநாகு – இளைய பசு
- மழவிடை – இளங்காளை
- மறுகு – அரசவீதி
- மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும்.
- சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- இவற்றுள் 13 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். இதில் 431 வெண்பாக்கள் உள்ளன
ஆசிரியர் குறிப்பு :
- நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டுப் பொன்விளைந்த களத்தூரிலே தோன்றியவர்.
- பாண்டியனாகிய வரகுணனுக்குப் பெரிதும் அன்புடையவராக அவன் அவையில் வீற்றிருந்தார்.பாண்டியனின் மகளுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்.
- அவள் சோழ மன்னான குலோத்துங்கனை மணக்கவும், அவள் வேண்டுகோளின்படி இவரும் சோழனின் அவைக்குச் சென்றார்.
- அங்கே இவருக்கும் சோழனின் ஆசிரியர் ஒட்டக்கூத்தருக்கும் பகைமையும் மனமாறுபாடும் உண்டாகி நாளுக்கு நாள் பெருகி வரலாயிற்று.
- இவர்களுக்கிடையே நடைபெற்ற பலவாக்குவாதங்களுக்குச் சான்றாக பல பாடல்கள் உள்ளன.
- இதன் பொருட்டு இவர் பல கொடுமைகளுக்கும் உள்ளானார். முடிவில் புலவர்களிடையே சமாதானம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
- ஒட்டக்கூத்தரிடம் மாறுபாடு நிலவிய காலத்தில், இவர் சில காலம் மள்ளுவநாட்டைச் சேர்ந்தசந்திரன் சுவர்க்கி என்னும் குறுநில மன்னனின் ஆதரவில் வாழ்ந்து வந்தார்.
- அந்த நாளில் அவன் விருப்பப்படி இவர் இயற்றியதே இந்த நளவெண்பா என்னும் நூல் ஆகும்.
அசலாம்பிகை அம்மையார் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
அசலாம்பிகை அம்மையார்
- அசலாம்பிகை அம்மையார் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டனை என்ற ஊரில் பிறந்தார் .
- அசலாம்பிகை அம்மையார் சிறந்த பேச்சாளர்
- திரு வி க இவரை இக்கால ஔவையார் என்று பாராட்டுகிறார்
இயற்றிய நூல்கள்
- ஆத்திசூடி வெண்பா
- இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல்(409 பாடல்கள் )
- குழந்தை சுவாமிகள் பதிகம்
- திருவாமாத்தூர்ப் புராணம்
- திருவுடையூர் தலபுராணம்
- காந்தி புராணம்(2034 பாடல்கள் )
- திலகர் புராணம்
வேலுநாச்சியார் - சமச்சீர் பாடம்
வேலுநாச்சியார்
- ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
- சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார்
- 1772 இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுகனாதருக்கும் நடந்த போரில் முத்துவடுகநாதர்வீர மரணமடைந்தார்
- வேலுநாச்சியார் மைசூர் மன்னர் ஐதர் அலியை சந்தித்து ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்து பேசினார்
- ஐதர் அலி அவருக்கு படைவீரர்களை அனுப்பி உதவினார்
- 1780ஆம் ஆண்டு மருது சகோதரர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு சிவகங்கையை கைப்பற்றினார்
Tuesday, June 5, 2018
வில்லிபாரதம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்
மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்
தேன்பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும்
திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்
ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்
யான்பெற்ற பெருந்தவப்பே(று) என்னை அன்றி
இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே.
சொற்பொருள்:
- வான்பெற்ற நதி – கங்கையாறு
- துழாய் அலங்கல் – துளசிமாலை
- களபம் – சந்தனம்
- புயம் – தோள்
- தைவந்து தொட்டுத்தடவி
- ஊன் – தசை
- பகழி – அம்பு
- இருநிலம் – பெரிய உலகம்
- நாமம் – பெயர்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – வில்லிபுத்தூரார்
- தந்தை – வீரராகவர்
- ஆதரித்தவர் – வக்கப்பாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
- காலம் – பதினான்காம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
- இந்நூல் பத்து பருவங்களை கொண்டது.
- நாலாயிரத்து முந்நூற்றைம்பது விருத்தப் பாடலால் ஆனது
- இப்பாடல் எட்டாம் பருவமாகிய கன்னபருவத்தில் இடம்பெற்றுள்ளது
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
சொற்பொருள்:
- மதி – அறிவு
- அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி
- உதயம் – கதிரவன்
- மதுரம் – இனிமை
- நறவம் – தேன்
- கழுவு துகளர் – குற்றமற்றவர்
- சலதி – கடல்
- அலகு இல் - அளவில்லாத
- புவனம் – உலகம்
- மதலை – குழந்தை
- பருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – குமரகுருபரர்
- பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
- ஊர் – திருவைகுண்டம்
- இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்,மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை,திருவாரூர் மும்மணிக்கோவை , நீதிநெறி விளக்கம் முதலியன.
- சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
- இறப்பு – காசியில் இறைவனது திருவடியடைந்தார் ..
- காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
- 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
- இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெருவது பிள்ளைத்தமிழ்.
- பத்து பருவங்கள், பருவத்திற்கு பத்து பாடல் என நூறு பாடல்கள் கொண்டது.
- இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
- பத்து பருவங்களில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை .இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர். ஆண்பாலுக்கும் அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல் ஆகிய மூன்றும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் உரியன .
- புள்ளிருக்குவேளூரில் (வைதீஸ்வரன் கோவில்) எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் பெயர் முத்துக்குமாரசுவாமி. அவர் மீது பாடப்பட்டதால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என பெயர் பெற்றது
Subscribe to:
Posts (Atom)