Thursday, April 12, 2018

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

மரபும் பரிணாமும் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் அறிவியல்


  • தலைமுறை தலைமுறையாக நிகழும் பண்புகள் கடத்தலைப் பாரம்பரியம் எனலாம்
  • தாய்  தந்தை இருவரும் தங்களின் மரபுப் பொருளான (DNA )டி .என் . ஏ மூலம் பண்பு கடத்துதலில்சமப் பங்கினை கொள்வதன் மூலம் பங்களிக்கின்றனர்
  •  பாரம்பரியக் கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டவர் கிரிகர் ஜோகன் மெண்டல் (1822-1884)
  • மெண்டல் தனது தோட்டத்தில் பட்டாணிச் செடியை வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டார்
  • மெண்டலின் ஆய்வில் பட்டாணிச் செடியில் இரண்டாம் தலைமுறையில்  பெறப்பட்ட நெட்டை : குட்டை பண்புகள் 3 : 1 என்ற விகிதத்தில் இருந்தன .
  • மெண்டல் ஆஸ்திரிய நாட்டைச்சேர்ந்த  அகஸ்தீனியத் துறவி
  • புறத்தோற்றத்தில் வெளிப்படையாகக் காணப்படும் பண்புகளான நெட்டை அல்லது குட்டை . ஊதா அல்லது வெள்ளை நிறம் போன்றவைப் புறத்தோற்றப் பண்பு (பீனோட்டைப்)
  • இப்பண்புகளுக்குக் காரணமான குரோமோசோம் அல்லது ஜீன் அமைப்பு ஜீனாக்கப்பண்பு (ஜீனோ டைப் ) எனப்பட்டது
  • ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத தன்மைக்கு அல்லீல்கள் என்று பெயர் .
  • அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லீலோ மார்புகள் என்று பெயர் .
  • உடலுறுப்புப் பயன்பாடு பயன்பாடு குறித்து விளக்கியவர்  ஜீன் பாப்டைஸ் லாமார்க்
  • ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கினார்
  • தேவையும் எண்ணமுமே இம்மாற்றத்திற்கு காரணம் என்று விளக்கினார்
  • இயற்கைத் தேர்வு கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின்
  • பரிணாமம் என்பது எளிய தன்மை கொண்ட உயிரிகளிலிருந்து மேம்பட்ட தன்மை கொண்ட உயிரினங்களில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்களாகும்
  • 3 - 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் போன்ற ஹோமினிட்டுகள் கிழக்கு ஆப்ரிக்காவிற்கு வந்தனர் .
  • மனித இயல்பை ஒத்திருந்த ஹோமினிட்டுகள் ஹோமோ ஹெபிலிஸ் (மனிதருக்கு ஒப்பான இயல்பினர் ) என்று அழைக்கப்பட்டனர்
  • 3 - 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் - ஹோமினிட்டுகள்
  • 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் - ஹோமோஎரக்ட்டஸ்
  • 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் - நியாண்டர்தால் மனிதர்கள்
  • 75000 - 10000 ஆண்டுகளுக்கு முன்னர் - தற்கால ஹோமோசெபியன்கள்
  • 10000 ஆண்டுகளுக்கு முன்னர் -  மனிதப் பரிணாமம்
  •  மரபுப்பொறியியல் என்பது உயிரியின் குரோமோசோமின் டி என் ஏ வில் புதிதாக மரபியல் தன்மைகளைச் சேர்த்தோ குறைத்தோ மாற்றம் செய்வது ஆகும்
  • வினிகர் உற்பத்தி செய்ய அசிடிக் அமிலம் பயன்படுகிறது 
  • ஸ்டீராய்டுகள் லிப்பிடுகளில் இருந்து பெறப்பட்டவையாகும் 
  • ரைசோபஸ் பூஞ்சைகளில் இருந்து கொலஸ்ட்ரால் அடங்கிய பிரட்னிசெலோன் என்னும்  ஸ்டீராய்டு பெறப்படுகிறது .
  • எட்வர்ட் ஜென்னர் 1791 - ல் தடுப்பூசிக் கொள்கையை வெளியிட்டார் 
  • டாலி என்பது பிரதியாக்க முறையில் டாக்டர் வில்மட் அவர்களால் ஜூலை 1996 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செம்மறியாடு ஆகும்
  • மூலச்செல் (ஸ்டெம்செல்) என்பது சிறப்படையாத செல் குழுமம் ஆகும் . இவை  மைட்டாசிஸ் முறையில் பிளவுற்று மிக அதிக செல்களை உருவாக்கும் தன்மையுடையன .
  • உயிரித் தொழில் நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் B12 பெர்னீஷியஸ்  ரத்தசோகை நோயைக் குணமாக்கப் பயன்படுகிறது .
  • உயிர் உணரி என்பது உயிரியல் தூண்டலை மின் தூண்டலாக மாற்றும் கருவி ஆகும் .
  • உடல் செல் மரபணு மருத்துவம் - குறைபாடு உள்ளவரின் முழு ஜீன் தொகுதியையும் மாற்றும் முறையாகும் . இம் மாற்றம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை .
  • இனச்செல் மரபணு மருத்துவம் - பெற்றோர்களின் அண்டம் அல்லது விந்துச் செல்கள் மாற்றத்தினால் செய்யப்படுவதாகும் .இம்மாற்றம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது  .

இந்தியா - இயற்கையமைப்பு




* சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது. சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் புவியியல் மாறுபாடுகளின் விளைவாக டெர்ஷியரி கால டெத்திஸ் என்ற மிகப்பெரிய கடல் பகுதியிலிருந்து மேலெழுந்து இமயமலைகள் தோன்றின.

* புவியியல் கொள்கையின்படி, துவக்க காலத்தில் பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே நிலப்பகுதியாக இருந்ததென்று கருதப்படுகிறது. ஒரே தொகுப்பான அப்பகுதி பேஞ்சியா என்று அழைக்கப்பட்டது. அதைச்சுற்றி பேன்தலாசா என்ற நீர்ப்பரப்பும் காணப்பட்டது.

* பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் என்ற தாழ்வான இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு காலப் போக்கில், அந்த ஒன்றை நிலப்பகுதி சிறிது சிறிதாக இரண்டு பெரிய நிலப்பரப்புகளாக உடைந்தன.

* வடக்கில் உடைந்த பகுதி அங்காரா நிலப்பகுதி என்றும், தெற்கில் உடைந்த பகுதி கோண்ட்வானா நிலப்பகுதி என்றும் அழைக்கப்பட்டது.

* அவ்வாறு தெற்கில் உடைந்த கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து காலப்போக்கில் சிறிது சிறிதாகப் பிரிந்து வந்ததே இந்தியத் துணைக்கண்டமாகும்.

* நிலத்தோற்றம், நில உள்ளமைப்பு, வடிகாலமைப்பு, காலநிலை, இயற்கைத்தாவரம் மற்றும் மண் ஆகிய இயற்கைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படும் வட்டாரம் இயற்கை வட்டாரம் எனப்படும்.

* ஒருமித்த புவியியல் கூறுகளை உள்ளக்கிய ஓர் நிலப்பகுதி வட்டாரம் எனப்படுகிறது.

* இந்தியாவின் இயற்கையமைப்பை 3 பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன 1. வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள் 2. வடக்கிலுள்ள சமவெளிப்பகுதிகள் 3.தீபகற்ப பீடபூமிப் பகுதி ஆகியன.


வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள்

* காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை கிழக்கு மேற்காக சுமார் 2500 கிமீ நீளம் வரை இமயமலைகள் சங்கிலித் தொடர் போன்று பரவியுள்ளது.

* அத்துடன் இவை சுமார் 150 முதல் 400 கிமீ அகலம் வரை உள்ளது. மேற்கில் சுமார் 400 கிமீ அகலத்துடனும், கிழக்கில் சமார் 150 கிமீ அகலத்துடனும் காணப்படுகிறது.

* இமயமலைகள் இந்தியாவிற்கு வடக்கில் ஓர் இயற்கை அரணாக அமைந்துள்ளது. இளம் மடிப்பு மலைகளால் (Young Fold Mountains) ஆனதே இமயமலைகள் ஆகும்.

* இமயமலை மத்திய ஆசியாவின் பாமீர் முடிச்சில் இருந்து, (பாமீர் முடிச்சு உலகின் கூரை என்று குறிப்பிடப்படுகிறது) தொடங்குகிறது.

* இந்த இமயமலைத் தொகுப்பை நாம் மூன்று உட்பிரிவுகளாகக் காண்போம். அவையான அ) பெரும் இமாலயத் தொடர் (Greater Himalayas) ஆ.மத்திய இமாலயத் தொடர் (Middle Himalayas) இ. புற இமாலயத் தொடர் (Outer Himalayas)


பெரும் இமயமலைத் தொடர்கள்

* உலகின் உயர்ந்த மலைத்தொடர்கள் இங்குதான் உள்ளன. இவற்றிற்கு ஹிமாத்ரி தொடர் என்றும் வேறு பெயர் உண்டு காரகோரம், லடாக், கைலாயம், ஜாஸ்கர் போன்ற மலைத்தொடர்கள் இதில் உள்ளன.

* காரகோரம் மலைத்தொடரில் தான் காட்வின் ஆஸ்டின் அல்லது K2 என்ற உலகின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 8611 மீட்டர் ஆகும்.

* K2 என்பது தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ளது. கைபர் மற்றும் போலன் கணவாய்களும் தற்போது பாகிஸ்தானில் தான் உள்ளன.

* இவை தவிர பால்ட்ரோ பனியாறு, சியாச்சின் பனியாறு போன்றவைகளாலும் இத்தொடர் புகழ் பெறுகிறது.

* மக்காலு, தவளகிரி, நங்க பர்வதம், நந்தா தேவி போன்ற பிற சிகரங்களும் இத்தொடரில் தான் அமைந்துள்ளன. மேலும் இத்தொடரில் சில முக்கியக் கணவாய்கள் உள்ளன.

* காஷ்மீரிலுள்ள காரகோரம், கணவாய், இமாச்சலப் பிரதேசத்திலுள்ள ஷிப்கிலா கணவாய், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள பொம்டிலா கணவாய் ஆகிய குறிப்பிடத்தக்கவை.

* பெரும் இமாலயத் தொடர்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். ஹிமம் என்றால் பனி என்று பொருள், ஹிமாலயா என்றால் பனியின் இருப்பிடம் என்று பொருள்.

* வடக்குப் பகுதியில் இத்தொடர்களில்தான் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் (8848 மீ) அமைந்தள்ளது. இது நேபாளத்தில் அமைந்துள்ளது. இதற்கு சாகர் மாதா என்றும் பெயர் வவங்கப்படும்.

* அத்துடன் கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில், 8598 மீ உயரமுடைய, இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்கா சிகரம் விளங்குகிறது. இது சிக்கிம் மாநிலத்தில் உள்ளது.


மத்திய இமயமலைத் தொடர்கள்

* ஹிமாச்சல் தொடர்கள் என்றும் இதற்கு வேறுபெயர் உண்டு. சுமார் 3000 முதல் 4500 மீட்டர் உயரமுடையவை.ஹிமாத்ரி தொடருக்குத் தெற்கே அமைந்துள்ளது.

* பீர் பாஞ்சால், குமாயுன், மகாபாரத், திம்பு ஆகிய மலைத்தொடர்கள் இதில் அமைந்துள்ளன. இவற்றில் பீர் பாஞ்சால் தொடர் காஷ்மீரிலும், தவுளதார்தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத் தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத்தொடர்கள் நேபாளத்திலும் அமைந்துள்ளன.

* புகழ்பெற்ற பீர்பாஞ்சால் மற்றும் காஷ்மீர் பள்ளதாக்கு இத்தொடரில் உள்ளன. இதில் அதிக  உயரத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் குல்மார்க் ஆகும்.

* மேலும் டல்ஹெளசி (இமாச்சலப் பிரதேசம்), தர்மசாலா, சிம்லா (இமாச்சலப் பிரதேசம்), முசெளரி (உத்திரப் பிரதேசம்), நைனிடால் (உத்திராஞ்சல்), டார்ஜிலிங் (மேற்கு வங்காளம்) ஆகிய கோடை வாசஸ்தலங்கள் அமைந்துள்ளன.


புற இமயமலைத் தொடர்கள்

* இமயமலைகளின் தெற்குமுனைப்பகுதி இது. சிவாலிக் கொடர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. சராசரியாக 1000 மீ உயரமுடையது. தராய் காடுகள் இங்கு காணப்படுகிறது.

* இத்தொடர் தொடர்சிசியற்றுக் காணப்படுகிறது. இத்தொடருக்கும், மத்திய இமாலயத் தொடருக்கும் இடையில் பல பள்ளத்தாக்குகள் உள்ளன. அவை டூன்கள் என்றழைக்கப்படுகின்றன.

* டேராடூன் அத்தகைய பள்ளத்தாக்கே ஆகும். இத்தொடரின் கிழக்குப் பகுதியில் பூர்வாஞ்சல் குன்றுகள் உள்ளன. மேலும் இத்தொடரில் தான் காசி குன்றுகள், காரோ குன்றுகள், ஜெயந்தியா குன்றுகள் ஆகியன மேகாலயாவில் அமைந்துள்ளன. இத்தொடரில் பெருமளவு மண்ணரிப்பு நடைபெறுகிறது.

* மேற்காணும் பிரிவுகள் போலவே இமயமலைகளை திசைகளை அடிப்படையாகக் கொண்டும் பிரிப்பர்.

* ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாலங்களிலுள்ள இமயமலைகள் மேற்கு இமயமலைகள் என்றும், உத்திரப்பிரதேசம், நேபாளம் ஆகிய இடங்களிலுள்ளவை * மத்திய இமயமலைகள் என்றும், மேற்கு வங்காளம், சிக்கிம், பூடான், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள இமயமலைகள் கிழக்கு இமயமலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

* குமாயுன் பள்ளத்தாக்கு உத்திரப்பிரதேசத்திலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு (பூமியின் சொர்க்கம்) ஜம்மு-காஷ்மீரிலும் அமைந்துள்ளன.


தீபகற்ப இந்திய மலைத்தொடர்கள்

* தீபகற்ப இந்தியாவில் மூன்று மலைத்தொடர்கள் உள்ளன. 1.விந்திய-சாத்பூரா மலைகள் 2. மேற்குத்தொடர்ச்சி மலைகள் 3. கிழக்குக்குன்றுகள் ஆகியன. இவற்றில் விந்திய சாத்பூரா மலைகள் ந்ரமதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு-கிழக்கான செல்லுகின்றன. இவை உண்மையில் நர்மதா பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே உண்மையில் மலைகளே அல்ல. இம்மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிவடைகின்றன.

* சாத்பூரா மலைகள் நர்மதைக்கும் தபதிக்கும் இடையே காணப்படுகின்றன. இம்மலைகளின் பாறைகள் தக்காண, லாலா பீடமூபூமி பாறை வகைகளைச் சார்ந்தவை. இவை வரலாற்று காலத்தில் ஏற்பட்ட மடிப்பு மவைகள் ஆகும்.

* சாத்பூரா என்றால் ஏழு மடிப்புகள் என்று பொருள்படும் சாத்பூரா மலைகள் மிகப் பழமையான மடிப்பு மலைகள்.

* இவ்வாறே தீபகற்ப இந்தியாவின் மேற்கில் மேற்கு கடற்கரைக்கு இணையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. தபதி நதியின் முகத்துவாரத்திலிருந்து கன்னியாகுமரி வரை வடக்கு தெற்காவும் அமைந்துள்ளன.

* இத்தொடரில் மூன்று கணவாய்களும் உள்ளன. வடக்கில் தால்காட் போர்காட் கணவாய்களும், தெற்கில் பாலக்காட்டுக் கணவாயும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் உயரமான சிகரங்கள் உள்ளன.

* குறிப்பாக, நீலகிரி மலைகள் தொட்டபெட்டாவும், ஆனைமலையில் ஆனைமுடியும் குறிப்பிடத்தக்கவை. பழனிமலை, கொடைக்கானல் மலை, குற்றால மலை ஆகியனவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தவை.

* கோடை வாழிடங்களான உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, ஆகியனவும் இம்மலைத் தொடரில் உள்ளன.

* கிழக்குக் குன்றுகள் கிழக்குக்  கடற்கரைச் சமவெளியை ஒட்டி அமைந்துள்ளன. தொடர்ச்சியற்ற பல குன்றுகளாகவும் உள்ளன. ஒரிசா மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டிச் செல்கின்றன.

* பின்னர் தென்மேற்காகச் சென்று நீலகரியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் இணைகின்றன. இதில் திருப்பதி மலை, ஜவ்வாது மலை, கொல்லி மலை, பச்சைமலை ஆகியவை முக்கியமானவை. ஏற்காடு, ஏலகிரி ஆகியவை இம்மலைகளில் முக்கிய சுற்றுலாத் தலங்கள்.


வடக்கில் உள்ள சமவெளிப் பகுதிகள்

* இமயமலைகளின் அடிப்பகுதியிலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதி வரை சுமார் 7.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர் வரை சமவெளிகள் பரந்துள்ளன.

* பஞ்சாப் சமவெளி முதல் அல்லாம் பள்ளத்தாக்கு வரையில் இச்சமவெளி பரவியுள்ளது. சுமார் 3200 கிமீ நீளமும், 150 முதல் 300 கிமீ வரை அகலும் உடையது. வண்டல் படிவுகளால் ஆனது.

* இமயமலையிலிருந்து தோன்றும் ஆறுகளால் இப்பகுதி வளப்படுத்தப்படுகிறது. இச்சமவெளியின் உயர்நிலப் பகுதி பாங்கர் மண்ணால் ஆன வளம் மிக்க பகுதியாகும்.

* மேலும் இச்சமவெளியின் தாழ்நிலப்பகுதி காதர் மண்ணால் ஆனது.

* ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு இடைப்பட்ட, தோவாப் பகுதிகளில் உயரமான இடங்களில் பழமையான படிவு மண் காணப்படுகிறது. இதுவே பாங்கர் ஆகும்.

* எனினும் பாங்கர் நிலப்பகுதிகளில், சமச்சீரற்ற சுண்ணாம்புப்படிவுகள் உள்ளன. இவை கான்கர் எனப்படும்.

* பாங்கர் பகுதிகளைப் பொறுத்த வரை, உயரமான உடங்களில் அமைந்துள்ளதால், வெள்ளத்தினால் அரிக்கப்படாமல் உள்ளது.

* ஆற்றுப்பள்ளத்தாக்குளின் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மண் காதர் ஆகும். உத்திரப்பிரதேசத்தில் இம்மண் காதர் என்றும் பஞ்சாப் பகுதியில் இம்மண் பெட் என்றும் வழங்கப்படுகிறது.

* இம்மண் உள்ள இடங்கள் தாழ்நிலங்களாக உள்ளமையால், வெள்ளத்தினால் அரிப்புக்கு உட்படுகிறது.
பஞ்சாப் சமவெளி

* ராவி, பியாஸ், சட்லெஸ் பேபான்ற ஆறுகளின் படிவுகளால் இச்சமவெளி வளப்படுத்தப்படுகிறது. சட்லெஜ் மற்றும் யமுனா நதிகளுக்கிடையில் காக்கர் ஆறு அல்லது சரஸ்வதி ஆறு பாய்கிறது.

இராஜஸ்தான் சமவெளி

* தார் பால்வனத்தின் மருஸ்தாலி மற்றும் ஆரவல்லி மலைத்தொடர்களின் மேற்குப் பகுதிகளில் இச்சமவெளி காணப்படுகிறது.

* கட்ச் வளைகுடாவை நோக்கிப் பாயும் லூனி ஆறு இச்சமவெளியை வளப்படுத்துகிறது. சாம்பார் எரியும் இச்சமவெளியில் தான் உள்ளது.

கங்கைச் சமவெளி

* சுமார் 3.5 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இச்சமவெளி உத்திரப்பிரதேசம், பீகார், மேறு வங்காளம் ஆகிய பகுதிகளில் அமைகிறது.

* கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளால் இச்சமவெளி உருவாகிறது. இச்சமவெளியின் கீழ்ப்பகுதிகளில்தான்  கங்கையின் டெல்டா படிகிறது.

* கங்களையின் பழைய டெல்டா அடுக்கினை பரின்ட் என்பர். கங்கையின் விளைவாகவே சுந்தர்பன் டெல்டா படிகிறது.

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு

* இதனை அஸ்ஸாம் பள்ளத்தாக்கு என்றும் அழைப்பர். பிரம்மபுத்திராவின் படிவுகளால் இச்சமவெளிப்பகுதி உருவாகிறது. கிழக்கிலிருந்து மேற்காக தாழ்வாக உள்ளது.

* பிரம்மபுத்திரா தனது மிகப் பரந்த டெல்டாவை பங்களாதேசத்தில் உருவாக்குகிறது.

* அருணாச்சலப் பிரதேசத்தில் பிரம்மபுத்திரா பகுதி திஹாங் என்றும், திபெத்தில் ஸாங்போ என்றும் அழைக்கப்படுகிறது.

தீபகற்ப பீடபூமி

* இப்பீடபூமி வடசமவெளிக்குத் தெற்கில் காணப்படுகிறது. இது பழமையானதும், கடினமானதுமான படிகப் பாறைகளால் ஆனதாகும்.

* நர்மதை ஆறு அமைந்துள்ள பிளவுப்பள்ளத்தாக்கு இப்பீடபூமியை வட, தென் பகுதிகளாகப் பிரிக்கிறது. வடக்கில் அமைந்த சிறிய பீடபூமிப் பிரதேசத்தை மாளவப் பீடபூமி என்றும், பெரிய பீடபூமியை தக்காணப் பீடபூமி என்றும் வழங்குவர்.

மாளவப் பீடபூமி

* மாளவப் பீடபூமியின் மேற்குப் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரும், தெற்கில் விந்திய மலைத்தொடரும், மாளவப்பீடபூமியின் வடமேற்கில் இராஜஸ்தான் பாலைவனமும் அமைந்துள்ளது.

* ஆரவல்லி மலைத்தொடரில் தான் மவுண்ட் அபு (கோடை வாசஸ்தலம்) மற்றும் குரு ஷிக்கார் ஆகிய முக்கிய சிகரங்கள் உள்ளன.

* இப்பீடபூமியில் தான் பண்டில்கண்ட் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு அமைந்துள்லது. மாளவப் பீடபூமி இந்தியாவின் கனிமச் சுரங்கங்களின் இருப்பிடம் ஆகும்.

* மாளவப் பீடபூமியின் கிழக்கில்தான் தாமோதர் நதியினால் உருவாக்கப்பட்ட சோட்டா நாகபுரி பீடபூமிப்பகுதி அமைந்துள்ளது.

* ஆரவல்லி மலைத்தொடர் தான் உலகின் மிகப்பழமையான மலைத்தொடர் (எஞ்சிய மலைகள்) ஆகும். மாளவப்பீடபூமியின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

* மாளவப் பீடபூமி சிறிய முக்கோண வடிவத்தில் உள்ளது. மாளவப்பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம் மவுண்ட் அபு (குறு ஷிகார்) என்பதாகும்.

தக்காணப் பீடபூமி

* நர்மதைப் பிளவிற்குத் தெற்கில் தக்காணப்பீடபூமி உள்ளது. தக்காணப் பீடபூமி தலைகீழ் முக்கோண வடிவில் அமைந்துள்ளது.

* இதன் வடக்குப் பகுதியில் சாத்பூரா தொடர், மைக்கால் தொடர், ஹசாரிபாக் தொடர் ஆகியன அமைந்துள்ளன. நர்மதா மற்றும் தபதி நதிகளுக்கிடையில் சாத்பூரா தொடர் அமைந்துள்ளது.

* தக்காணப் பீடபூமியின் மேற்கு எல்லை மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் பெயருடன் வடக்கு தெற்காக உள்ளது. வடக்கில் சஹாயத்ரி என்றும், இடையில் நீலகிரி என்றும், முடிவில் ஆனைமலை, ஏலமலை என்றும் பெயர் பெறும் இம்மலைத் தொடர்ச்சி உண்மையில் மலையே அன்று.

* பீடபூமியின் உயர்ந்த மேற்கு விளிம்பே ஆகும். இவ்விளிம்பு மேற்கில் வன்சரிவுடன் குறுகிய அரபிக்கடற்கறையை அடைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை தெற்கில் உயரம் மிகுந்துள்ளது.

* இதன் உயர்ந்த சிகரம் கேரளாவில் உள்ள ஆனைமுடி (2695 மீ) ஆகும். இச்சிகரம் ஆனைமலையில் உள்ளது.

* மேற்குத் தொடர்ச்சி மலையில் தால்காட், போர்காட், பால்காட், தார்வார், ஆரியங்காவு, ஆரல்வாய் மொழிக் கணவாய் போன்ற கணவாய்கள் உள்ளன.

* அத்துடன் மேற்குத் தொடர்ச்சியின் முகட்டில் இருந்து நிலம் கிழக்கு நோக்கி மென்சரிவுடன் சாய்கிறது. தக்காணப் பீடபூமியின் கிழக்கு எல்லையிலும் மலைகள் காணப்படுகின்றன. இவை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும்.

* எனினும் இவை தொடர்ச்சியானவை அல்ல. அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலை போன்று உயரமானவையும் அல்ல.

* ஆறுகளின் நர்மதை மற்றும் தபதி ஆகிய இரு ஆறுகள் மட்டும் மேற்கு நோக்கிப் பாய்கின்றன. பிற ாறுகள் அனைத்தும் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன.

* கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் அனைத்தும் அகன்ற டெல்டாக்களை அமைக்கின்றன. ஆனால் நர்மதையும் தபதியும் அவ்விதமான டெல்டாக்களை அமைக்கவில்லை,

* தக்காணப் பீடபூமியின்  மூன்று பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டும், கிழக்கு நோக்கிச் சரிந்தும் காணப்படுகிறது.

* கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், மேற்குத்தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலையில் உள்ள தொட்டபெட்டா(2637 மீ) (தமிழகத்தின் உயர்ந்த சிகரம்) சிகரத்தில் இணைகின்றன.

* கிழக்குத் தொடர்ச்சி மலையில் நல்லமலை (ஆந்திரப்பிரதேசம்), ஜவ்வாது மலை (தமிழ்நாடு), கொல்லி மலை (தமிழ்நாடு), பச்சமலை (தமிழ்நாடு) ஆகிய மலைகள் உள்ளன.

* மேற்குத் தொடர்ச்சி மலையில் அPந்தா குன்றுகள் (மகாராஷ்டிரா), நீலகிரி மலைகள், ஆனைமலை, ஏலக்காய் மலை, அகத்திய மலை போன்றவைகள் உள்ளன.

கடற்கரைச் சமவெளிகளும் தீவுகளும்

* தக்காணப் பீடபூமியின் கிழக்கில் கிழக்குக் கடற்கரைச் சமவெளியும், மேற்கில் மேற்குக் கடற்கரைச் சமவெளியும் அமைந்துள்ளன.

* கிழக்குக் கடற்கரைக் சமவெளி மகாநதி டெல்டா பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. 50 முதல் 250 கிமீ வரை அமைந்துள்ளது.

* மகாநதி டெல்டா, கிருஷ்ணா டெல்டா, கோதாவரி டெல்டா ஆகிய டெல்டாக்கள் இக்கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ளன. சில்கா ஏரி மற்றும் புலிக்காட் ஏரி ஆகிய இரண்டும் இதில் தான் உள்ளன.

* கிழக்குக் கடற்கரைச் சமவெளியை சோழ மண்டலக் கடற்கரை என்றும் வழங்குவர்.

* சோழ மண்டலக் கடற்கரையின் வடபகுதி அதாவது ஒரிசா மாநிலத்தின் கடற்கரைப்பகுதி, உத்கல் கடற்கரைச் சமவெளி என்றும், அதன்கீழ் வடசார்க்கார் கடற்கரைச் சமவெளி (ஆந்திரப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் காவிரி டெல்டா இக்கடற்கரைச் சமவெளியின் சிறப்பம்சம் ஆகும்.

* மேற்குக் கடற்கரைச் சமவெளி வடக்கில் சூரத் (குஜராத்) முதல் தெற்கில் திருவனந்தபுரம் (கேரளா) வரை பரவியுள்ளது. இக்கடற்கரைச் சமவெளியின் வடபகுதி கொங்கணக் கடற்கரை என்றும், தென்பகுதி மலையாளக் கடற்கரை அல்லது மலபார் கடற்கரை என்றும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுப்பகுதி கன்னடக் கடற்கரை என்றும் வழங்கப்படுகிறது.

* வெம்புநாடு என்னும் உப்பு ஏரி இக்கடற்கரைச் சமவெளியில் தான் அமைந்துள்ளது. இக்கடற்கரைச் சமவெளியில் தான் மும்பை மற்றும் மப்மகோவா துறைமுகங்கள் அமைந்துள்ளன.

* தீபகற்ப இந்தியாவின் பிளவுகள் ஏற்பட்டபோது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கில் வடக்கு தெற்காக ஏற்பட்ட பிளவின் வழியே நிலப்பகுதி கடலில் அமிழ்ந்தது.

அவ்வாறு நிலப்பகுதி அமிழ்ந்ததால்தான் மேற்குக்க கடற்கரை உருவானது. எனவேதான் மேற்குக் கடற்கரை நேராகவும், குறுகலாகவும் காணப்படுகிறது.

* இந்தியப் பெருங்கடலில் சுமார் 350 தீவுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகள் மிகவும் சிறியவை. இவை இரு பிரிவுகளாக உள்ளன. அவை:1. அந்தமான் மற்றும் நிக்கோபார் 2. இலட்சத் தீவுகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

* இவை வங்காள விரிகுடாவில் அந்தாமான் என்றும் நிக்கோபார் தீவுகள் என்றும் இரு பிரிவுகளாக அமைந்துள்ளன. இவை மொத்தம் 300 தீவுகள் உள்ளன.

* அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைப் பிரிப்பது Ten Degree Channel என அழைக்கப்படுகிறது. இதன் தலைநகர் போர்ட்ப்லேயர் ஆகும். இந்தியாவின் தென்கோடி

முனையாகிய இந்திரா முனை இங்குதான் உள்ளது. இந்திரா முனை நிக்கோபார் தீவுகளில்தான் உள்ளது.

* வடக்கில் அந்தமான் தீவுகளும், தெற்கில் நிக்கோபார் தீவுகளும் அமைந்துள்ளன. இங்கு பாரன் மற்றும் நார்கெடாம் தீவுகளில் எரிமலைகள் உள்ளன.

* சில தீவுகளில் பவழப்பாறைகள் உள்ளன. அந்தமானில் உள்ள உயர்ந்த சிகரம் சாடில் சிகரம் ஆகும்.

இலட்சத் தீவுகள்

* அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 320 கிமீ தொலைவில் இலட்சத்தீவுகள் உள்ளன. இவற்றில் வளைம் போன்ற அமைப்போடு காணப்படுவை தீவுகள் எனப்படுகின்றன.

* மொத்தம் 27 தீவுகள் காணப்படுகின்றன. இவற்றில் 17 தீவுகளில் மனிதர்கள் வசிக்கவில்லை. இதன் நகரம் கவரட்டி. பாம்பன் மற்றும் இராமேஸ்வரம் தீவுகள்

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன.

* தெற்கே கடைசியாக உள்ள தீவு மினிகாய் தீவு ஆகும். இவை எட்டு டிகிரி கணவாய் இலட்சத்தீவில் அமைந்துள்ளன. மேலும் பவழப்பாறைகள் இலட்சத்தீவில் காணப்படுகின்றன.

இந்திய வடிகாலமைப்பு

* பொதுவாக இந்தியாவில் பாயும் ஆறுகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை: 1. வடஇந்திய ஆறுகள் 2. தென்னிந்திய ஆறுகள் அல்லது தீபகற்ப ஆறுகள்.

வடஇந்திய ஆறுகள்

* வடஇந்திய ஆறுகளில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் அடங்கி உள்ளன.

* வட இந்திய ஆறுகள் தென்மேற்குப் பருவக்காற்று மழை மற்றும் பனி உருகி வரும் நீரால் ஆண்டு முழுவதும் வெள்ளம் கொண்டவை. இவ்வாறுகள் நீர் மின் உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவை உள்னாட்டு நீர் வழிப் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன.

சிந்து

* உலகின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றாகும். 2900 கிமீட்டர் நீளமுடையது. இதில் 709 கிமீ இந்தியாவில் உள்ளது.

* இவை இமயமலையில் உள்ள கயிலைக்குன்றுப் பகுதியில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி, பஞ்சாப் வழியாகப் பாய்ந்து, பிறகு பாகிஸ்தான் பகுதியில்

நுழைந்து அரபிக்கடலில் கலக்கிறது. இதன் பெரும்பகுதி பாகிஸ்தானில் உள்ளது.

* ஜீலம் , சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகள் சிந்துவின் துணையாறுகள் ஆகும் .இவற்றில்ஜீலம், சீனாப் மற்றும் சிந்து ஆகிய பாகிஸ்தானில் பாய்கிறது.

* இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமிடையில் 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை வரம்பின்றி இந்தியா பயன்படுத்தும் அதிகாரம் பெற்றது.

* பிற இரு துணையாறுகளின் நீர் பயனாக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.

* சிந்து நதியால் நமக்குக் கிடைக்கும் நீர் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நீர்ப்பாசனத்திற்கும், மின்சக்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

* சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும்

பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே நம் பாரதம் இந்திய என்று பெயர் பெற்றது. (ஃஇந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)

கங்கை

* இந்தியாவின் புனித நதி கங்கை. இவை இமயமலையில் உள்ள கங்கோத்ரி என்ற பனியாற்றில் உற்பத்தி ஆகிறது. இந்த ஆற்றின் நீளம் சுமார் 2510 கிமீ ஆகும்.

* இவை உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் வழியாக பாய்ந்து செல்கிறது. இந்தியப் பரப்பின் 25 சதவீதம் கங்கை நதியின் பரப்பே ஆகும்.

* இமயமலைகளில் அலக்நந்தா மற்றும் பாகீரதி என்னும் இரு தலைப்பிரிவுகளாக உருவாகிறது.

* கங்கையின் முக்கியத் துணையாறு யமுனை. இவை கங்கையுடன் கலக்குமிடம் அலகாபாத்தில் உள்ள பிரயாகை ஆகும்.

* ராம்கங்கா, காக்ரா, கண்டக், பாக்மதி, கோசி, சாரதா, சம்பல், கோமதி, ஹூக்ளி ஆகியவை கங்கையின் துணையாறுகள் ஆகும்.

* ஹரித்துவார், கான்பூர், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகியன கங்கையின் மீது அமைந்துள்ள முக்கிய நகரங்களாகும்.

* கங்கை தனது கழிமுகப்பகுதியில் பல பிரிவுகளாகப் பிரிந்து சுந்தர்பன் டெல்டாவை உருவாக்கிய பின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

* வங்கதேசத்தில் கங்கை பத்மா என அழைக்கப்படுகிறது.

* கங்கை நதியைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் 1995ல் தேசிய நதி பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1995ல் மத்திய கங்கை நதி அமைப்பும் நிறுவப்பட்டது.

பிரம்மபுத்திரா

* இவை கயிலைக்குன்றுகளில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி கிழக்காக திபெத்தில் ஸாங்போ என்ற பெயருடன் இந்தியா மற்றும் லங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்கிறது. இவை 2880 கிமீ நீளமுடையது.

* அருணாச்சலப் பிரதேசத்தில் திஹாங் என்ற பெயருடன் நுழைகிறது.

* அஸ்ஸாமில் பெரும்பாலான போக்குவரத்து பிரம்மபுத்திரா ஆற்றின் மூலமாகவே நடைபெறுகின்றன.

* பிரம்மபுத்திரா, பங்களாதேஷில் பத்மா ஆற்றுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கிய பின் வங்காளா விரிகுடாவில் கலக்கிறது.

* வங்களாத்தில் ஜமூனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தென்னிந்திய ஆறுகள்

* தென்னிந்திய ஆறுகளில் நர்மதை, தபதி, லூனி, சபர்மதி ஆகிய ஆறுகள் மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. பிற ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன.

* கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் மட்டும் டெல்டாவை அமைக்கின்றன. தென்னிந்திய ஆறுகளின் சில முக்கிய ஆறுகள் நர்மதை, தபதி, தாமோதர் ஆறு, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி.

நர்மதை ஆறு

* மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் மிக நீளமான ஆறு நர்மதையே ஆகும். விந்திய சாத்பூரா மலைத்தொடர்களுக்கு இடையில் இந்நதி பாய்கிறது.

* இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்டக் என்னும் பகுதியில் உற்பத்தியாகிறது. இது பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்திலேயே பாய்கிறது. இதில் 10ல் ஒரு பகுதி மட்டுமே குஜராத்தில் பாய்கிறது.

தபதி

* மத்தியப்பிரதேசத்தில் உற்பத்தியாகிறது. 724 கிமீ நீளம் உடையது. அரபிக்கடலில் கலக்கிறது. மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் இரண்டாவது மிக நீளமான ஆறு தபதி ஆகும்.

* மத்தியப்பிரதேசம் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளது.

தாமோதர் ஆறு

* 530 கிமீ நீளமுடைய மகாநதி, மத்தியப்பிரதேசத்தின் அமர்கண்டக் பகுதியிலிருந்து உற்பத்தியாகி, ஒரிசாவை முழுமையாக வளப்படுத்தி, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

* இது கடலில் சேருவதற்கு முன் ஒரு மாபெரும் டெல்டா சமவெளியை உருவாக்குகிறது. மகாநதியின் குறுக்கே தான் ஹிகுராட் ஆணை உள்ளது.

கோதாவரி

* தென்னிந்திய ஆறுகளின் மிகப்பெரிய ஆறு கோதாவரி ஆகும் இந்திய நிலப்பகுதியில் 10 சதவீதம் இதன் பரப்பாகும்.

* 1440 கிமீ நீளமுள்ள இந்த ஆறு மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் பகுதியில் இருந்து உற்பத்தியாகி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மஞ்சிரா, பென்கங்கா, வெயின்கங்கா,

இந்திராவதி, வார்தா ஆகியன இதன் துணை ஆறுகள் ஆகும். தட்சிண கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணா

* மகாராஷ்டிராவில் மகாப்லேஸ்வர் குன்றுகளில் உற்பத்தியாகிறது. தென்னிந்திய ஆறுகளில் இரண்டாவது மிகப்பெரிய ஆறு கிருஷ்ணா.

* இவை மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிருஷ்ணா நதி பாய்கிறது.

* கொய்னா, பஞ்சகங்கா, கதப்ரபா, மலப்ரபா, பீமா, துங்கபத்ரா, வாணா ஆகியவை இதன் துணையாறுகள். இவைகள் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காவிரி
* தென் கங்கை என்றழைக்கப்படும் ஆறு. கர்நாடகாவில் உள்ள குடகு மலைக்கருகில் தலைக்காவிரி என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது இதன் நீளம் 760 கிமீ நீளமுடையது.

* கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாகப் பாய்ந்து வங்காள வரிகுடாவில் கலக்கிறது. காவிரி அமைந்துள்ள டெல்டாவினையே தஞ்சை டெல்டா என்கிறோம். பவானி,

நொய்யல், அமராவதி போன்றவை இதன் துணையாறுகள்.

* காவிரி பாயும் மாநிலங்கள் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியன.

* காவிரியில் தென்மேற்குப் பருவகாலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படும்.

* காவிரி நதியின் குறுக்கே கர்நாடகத்தில் கண்ம்பாடி என்னும் இடத்தில் கிருஷ்ணராஜசாகர் என்ற அணையும், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் ஸ்டானில் அணையும் கட்டப்பட்டுள்ளன.

* திருச்சிக்கு மேற்கில் காவிரி இரண்டாகப் பிரிந்து ஸ்ரீரங்கம் தீவைத் தோற்றுவிக்கின்றன.

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

வரலாற்று ஆவணம்:
  • ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது.
இளமைக்காலம்:
  • ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர்.
  • தந்தை - திருவேங்கடம்
  • தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார்.
  • "எம்பார்" என்பவரிடம் கல்வி கற்றார்.
புதுவைக்கு செல்லுதல்:
  • இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.
  • அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.
துபாசி:
  • ஆனந்தரங்கர் கல்வி கற்றபின்னர், பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார்.
  • "துய்ப்ளே" என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்(துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு:
  • ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736 ஆம் ஆண்டு முதல் 1761 ஆண் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
  • தம் நாட்குறிப்புக்கு "தினப்படிச் செய்திக்குறிப்பு", "சொஸ்த லிகிதம்" எனப் பெயரிட்டார்.
வரலாற்றுச் செய்திகள்:
  • பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோலிவியடைந்தது, தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ கப்பல் பிரெஞ்சு நாட்டில்லிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.
  • ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.
வணிகச் செய்தி:
  • துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும்.
  • புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர்.
  • அது குறித்து, "நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கல்யாணம் நடப்பது போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் போலவும், தேவாமிர்த்ததைச் சுவைத்ததுபோலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும் பகுதி வாணிகச் செய்திகளையே விவரிக்கின்றன.
தண்டனைச் செய்தி:
  • நீதி வழங்கல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
  • திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டு நிலை:
  • ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கம் செய்தல், கோவில் திருவிழாக்கள், பலகை வழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றை குறித்துள்ளார்.
ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள்:
  • முசபர்சங், ஆனந்தரங்கருக்கு மூவாயிரம் குதிரைகளை வழங்கி, அவருக்கு "மண்சுபேதார்" என்னும் பட்டம் வழங்கினார்.
  • பின்பு செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும், பின்பு அமாமாவட்டம் முழுமைக்கும் ஜாகிர்தாராகவும் நியமித்தார்.
  • ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.
  • அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை பெற்றிருந்தார்.
 பெப்பிசு:
  • உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி - பெப்பிசு
  • இந்தியாவின் பெப்பிசு - ஆனந்தரங்கர்
  • நாட்குறிப்பு வேந்தர் - ஆனந்தரங்கர்
 பிறமொழி சொற்கள்:
  • சொஸ்த = தெளிந்த அல்லது உரிமையுடைய
  • லிகிதம் = கடிதம் அல்லது ஆவணம்
  • வளவு = வீடு
  • துபாசி = இருமொழிப்புலமை உடையவர்(மொழிப்பெயர்ப்பாளர்)
  • டைஸ் என்னும் இலத்தின் சொல்லுக்கு நாள் என்பது பொருள்.
  • இச்சொல்லில் இருந்து டைரியம் என்னும் இலத்தின் சொல் உருவானது.
  • இச்சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்து டைரி என்னும் ஆங்கிலச் சொல் உருவானமது.
 பிற குறிப்புகள்:
  • அருணாச்சலக் கவிராயர் தம் இராமநாடகத்தைத் திருவரங்கரத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றினார்.
  • கே.கே.பிள்ளை, "ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி என்றார்.
  • "தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்" - வ.வே.சு
  • துய்ப்ளே ஆட்சியில் ஆனந்தரங்கருக்குத் தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன.
 ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்த இலக்கியங்கள்:
  • ஆனந்தரங்கர் கோவை = தியாகராச தேசிகர்
  • கள்வன் நொண்டிச் சிந்து
  • ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ் = அறிமதி தென்னகன்
  • ஆனந்தரங்கர் விஜயசம்பு = சீனுவாசக்கவி (வடமொழி)
  • ஆனந்தரங்கர் ராட்சந்தமு = கச்தூரிரங்கக்கவி(தெலுங்கு)

TNPSC 12ம் வகுப்பு தாவரவியல் - முக்கிய குறிப்புகள்



  

கவிஞர் அ.மருதகாசி - தமிழறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


பிறப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு என்னும் கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி பிறந்தார்.

தந்தை: அய்யம்பெருமாள் உடையார்

தாய்: மிளகாயி அம்மாள்:

கல்வி: உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார்.

திருமணம்: 1940 இல் தனக்கோடியை மணந்தார். இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

நாடகப் பணி: அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புகளுக்குப் பிறகு குடந்தையில் தேவி நாடக சபையின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். மு.கருணாநிதி எழுதிய மந்திரகுமாரி போன்ற நாடகங்களுக்கும் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபால அய்யரிடம் உதவியாளராக இருந்தார்.

குரு: உடுமலை நாராயணகவியை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர்.
என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள் கவிஞரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது எனக் கூறியவர்.

பட்டம்: திரைக்கவித் திலகம் என்னும் பட்டம்

மனதை விட்டு மறையாத பாடல்கள்:

-"மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு வூட்டி வயக்காட்டை உழுதுபோடு சின்னக் கண்ணு"

-"வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்"

-"மாசில்லா உண்ணைக் காதலே"

-"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா...
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா"

-"சமரசம் உலாவும் இடமே - நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே"

-"ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை"

-"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, விவசாயி"

- ஆளை ஆளைப் பார்க்கிறார்

-சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு

-கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த

-ஆனாக்க அந்த மடம்…

-கோடி கோடி இன்பம் பெறவே

-ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே

-கடவுள் என்னும் முதலாளி

-வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

-முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல

-காவியமா? நெஞ்சின் ஓவியமா?

இப்படி திரைப்பட உலகில் 4000 பாடல்களுக்கு மேல் எழுதியவர். கால் நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற திரையுலக சகாப்தக் கவிஞரும் இவரே.

மறைவு: தமிழ் திரைப்பட உலகில் காதலுக்கும் பாட்டு. கல்யாணத்துக்கும் பாட்டு. உழவர்க்கும் பாட்டு. உழைப்பாளிக்கும் பாட்டு என இவர் தொடாத துறையில்லை. எழுதாத பாட்டில்லை. அதாவது 1949–ல் ‘மாயாவதி’ என்ற படத்தில் தொடங்கி 1983–ல் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ திரைப்படம் வரை தொடர்ந்த கவிஞரின் திரையுலக சகாப்தம் 29.11.1989 இல் தூங்கியது.

ரா.பி.சேதுபிள்ளை - தமிழறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


  • சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 
  • கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்தார்.
  • இரா. பி. சேதுப்பிள்ளையின் முன்னெழுத்துகளாக அமைந்த 'இரா' என்பது இராசவல்லிபுரத்தையும் 'பி' என்பது 'பிறவிப்பெருமான்பிள்ளை' அவர்களையும் குறிப்பன.
  • இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார். 
  • ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். 
  • உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது. 
  • சேதுப்பிள்ளை தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்து விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறாண்டுகள் பணி புரிந்தார்
  • வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். 
  • சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் இவரது கம்பராமாயணச் சொற்பொழிவு மூன்றாண்டுகள் நடைபெற்றது. 
  • அச்சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பர் கழகம் நிறுவப்பட்டது.
  • இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் "திருவள்ளுவர் நூல் நயம்" என்பதாகும். 
  • படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, "தமிழகம் ஊரும் பேரும்" என்பதாகும்.
  •  இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது. மேலும்,
  • சிலப்பதிகார நூல்நயம்
  • தமிழின்பம்
  • தமிழ்நாட்டு நவமணிகள்
  • தமிழ்வீரம்
  • தமிழ்விருந்து
  • வேலும்வில்லும்
  • வேலின்வெற்றி
  • வழிவழி வள்ளுவர்
  • ஆற்றங்கரையினிலே
  • தமிழ்க்கவிதைக் களஞ்சியம்
  • செஞ்சொற் கவிக்கோவை
  • பாரதியாரின் கவித்திரட்டு
போன்ற நூல்கள் இவரின் படைப்புகளாகும்
  • சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு வழங்கப்பட்டது. 
  • கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.
  • சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருது வழங்கியது. 
  • சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்.
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
  • ஆற்றங்கரையினிலே 
  • கடற்கரையினிலே 
  • கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் 
  • தமிழ் விருந்து 
  • தமிழக ஊரும் பேரும் 
  • தமிழர் வீரம் 
  • தமிழின்பம் 
  • மேடைப் பேச்சு 
  • வேலின் வெற்றி

கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி - தமிழறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


  •  கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில்   பிறந்தார்.
  •  1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
  • 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ல் வெளியானது.
படைப்புகள்
  • 401புதினங்கள்
  • கள்வனின் காதலி (1937)
  • தியாகபூமி (1938-1939)
  • மகுடபதி (1942)
  • அபலையின் கண்ணீர் (1947)
  • சோலைமலை இளவரசி (1947)
  • அலை ஓசை (1948)
  • தேவகியின் கணவன் (1950)
  • மோகினித்தீவு (1950)
  • பொய்மான் கரடு (1951)
  • புன்னைவனத்துப் புலி (1952)
  • அமர தாரா (1954)
வரலாற்று புதினங்கள்
  • பார்த்திபன் கனவு (1941 - 1943)
  • சிவகாமியின் சபதம்(1944-1946) 
  • பொன்னியின் செல்வன் (1951-1954)
சிறுகதைகள்
  • சுபத்திரையின் சகோதரன்
  • ஒற்றை ரோஜா
  • தீப்பிடித்த குடிசைகள்
  • புது ஓவர்சியர்
  • வஸ்தாது வேணு
  • அமர வாழ்வு
  • சுண்டுவின் சந்நியாசம்
  • திருடன் மகன் திருடன்
  • இமயமலை எங்கள் மலை
  • பொங்குமாங்கடல்
  • மாஸ்டர் மெதுவடை
  • புஷ்பப் பல்லக்கு
  • பிரபல நட்சத்திரம்
  • பித்தளை ஒட்டியாணம்
  • அருணாசலத்தின் அலுவல்
  • பரிசல் துறை
  • ஸுசீலா எம். ஏ.
  • கமலாவின் கல்யாணம்
  • தற்கொலை
  • எஸ். எஸ். மேனகா
  • சாரதையின் தந்திரம்
  • கவர்னர் விஜயம்
  • நம்பர்
  • ஒன்பது குழி நிலம்
  • புன்னைவனத்துப் புலி
  • திருவழுந்தூர் சிவக்கொழுந்து
  • ஜமீன்தார் மகன்
  • மயிலைக் காளை
  • ரங்கதுர்க்கம் ராஜா
  • இடிந்த கோட்டை
  • மயில்விழி மான்
  • நாடகக்காரி
  • "தப்பிலி கப்"
  • கணையாழியின் கனவு
  • கேதாரியின் தாயார்
  • காந்திமதியின் காதலன்
  • சிரஞ்சீவிக் கதை
  • ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
  • பாழடைந்த பங்களா
  • சந்திரமதி
  • போலீஸ் விருந்து
  • கைதியின் பிரார்த்தனை
  • காரிருளில் ஒரு மின்னல்
  • தந்தையும் மகனும்
  • பவானி, பி. ஏ, பி. எல்
  • கடிதமும் கண்ணீரும்
  • வைர மோதிரம்
  • வீணை பவானி
  • தூக்குத் தண்டனை
  • என் தெய்வம்
  • எஜமான விசுவாசம்
  • இது என்ன சொர்க்கம்
  • கைலாசமய்யர் காபரா
  • லஞ்சம் வாங்காதவன்
  • ஸினிமாக் கதை
  • எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
  • ரங்கூன் மாப்பிள்ளை
  • தேவகியின் கணவன்
  • பால ஜோசியர்
  • மாடத்தேவன் சுனை
  • காதறாக் கள்ளன்
  • மாலதியின் தந்தை
  • வீடு தேடும் படலம்
  • நீண்ட முகவுரை
  • பாங்கர் விநாயகராவ்
  • தெய்வயானை
  • கோவிந்தனும் வீரப்பனும்
  • சின்னத்தம்பியும் திருடர்களும்
  • விதூஷகன் சின்னுமுதலி
  • அரசூர் பஞ்சாயத்து
  • கவர்னர் வண்டி
  • தண்டனை யாருக்கு?
  • சுயநலம்
  • புலி ராஜா
  • விஷ மந்திரம்

பரிதிமாற் கலைஞர் - தமிழறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


  • ரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்),  ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில்முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.
  •  இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர்.
  •  'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.
  • இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.
  • இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார் .

பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:

  •    ரூபவதி
  •    கலாவதி
  •    மான விஜயம்
  •    தனிப்பாசுரத் தொகை
  •    பாவலர் விருந்து
  •    மதிவாணன்
  •    நாடகவியல்
  •    தமிழ் விசயங்கள்
  •    தமிழ் மொழியின் வரலாறு.
  •    சித்திரக்கவி விளக்கம்


பதிப்பித்த நூல்கள் :
1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
5.தனிப்பாசுரத்தொகை (1901)
ஞானபோதினி என்னும் இதழை பரிதிமாற் கலைஞர் நடத்தினார்

கடற்பயணம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

  • தமிழ்நாட்டு வாணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது.
  • உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி.
  • அயல்நாட்டு வாணிகத்திலேயே தரைவழியாகச் செய்யும் வாணிகத்தைவிட, நீர் வழியாகச் செய்யும் வாணிகம் பெரும் பொருளைத் தரும்.
  • அந்நாளில் கடல் வாணிகம் மிகவும் சிறந்திருந்தது.
  • எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் போன்ற நாடுகள் தமிழர்களின் பொருள்களை விரும்பிப் பெற்றன.

தமிழரின் கடற்பயணம்:
  • "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஒளவையும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர். இவையே தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத் தொடர்புக்கும் சான்றுகளாகும்.
  • தொல்காப்பியம் தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
  • தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "பொருள்வயிற் பிரிவு" விளக்குகிறது. இப்பிரிவு "காலில்(தரைவழிப் பிரிதல்) களத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு" என இரு வகைப்படும்.
யவனர்: 
  • தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் "யவனர்" என அழைத்தனர்
கப்பல் கட்டுதல்:
  • "கலம்செய் கம்மியர்" என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.
  • அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன.
புறநானூறு கூறும் உவமை:
  • நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
கடலைக் குறிக்கும் சொற்கள்:
ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி.

மரக்கலத்தைக் குறிக்கும் சொற்கள்:
கப்பல், களம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மதிவை, பஃறி, ஓடம்.
கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும்.

 பட்டினப்பாலை:
  •  புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புரண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன.
  • அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.
  • துறைமுகங்கள்: காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை
 முசிறி:
  • முசிறி சேரர் துறைமுகம்.
  • அங்குச் "சுள்ளி" என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள், ஆற்றுத்துறைகள் கலங்கிப் போகும்படி வந்து நின்றன.
  • யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றி சென்றனர் என்ற செய்தியை அகநானூறு கூறுகிறது.
 கொற்கை:
  • கொற்கை பாண்டிய துறைமுகம்.
  • இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததை வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ கூறியுள்ளார்.
  • மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தின் சிறப்பை கூறியுள்ளன.
  •  "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என மதுரைக்காஞ்சி கூறுகிறது.
  • ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம்.
  • கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களைப் பட்டினம், பாக்கம் என்றழைப்பர்.
 காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்):
  • இது சோழர்களின் துறைமுகம்.
  • இங்கு பெரும்பாலும் வாழ்ந்தவர்கள் வணிகர்கள்.
  • அங்கு சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.
ஏற்றுமதி இறக்குமதி:
  • பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும் கூறுகின்றது.
  • தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன.
  • சீனத்துப் பட்டும் சர்க்கரையும் தமிழகத்திற்கு இறக்குமதி ஆயின.
  • கரும்பு, அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவில் இருந்து கொண்டு பயிரிடப்பட்டது.
  • கடல்சார் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பட்டம், பட்டயக்கல்வி கற்பிக்கப்பெற்று வருகின்றன.
  • பட்டினப் பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் ஏற்றுமதியான பொருள்கள் - இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண் துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி.
 கடல் கடந்த தமிழ்
            தமிழ் - கிரேக்கம்
  • அரிசி - ஒரைஸா
  • கருவூர் - கரோரா
  • காவிரி - கபிரில்
  • குமரி - கொமாரி
  • சோபட்டினம் - சோபட்னா
  • தொண்டி - திண்டிஸ்
  • மதுரை - மதோரா
  • முசிறி - முசிரில்